×

சி ல் லி பா யி ன் ட்…

* இந்திய அணி முன்னாள் கேப்டனும் சுழற்பந்து நட்சத்திரமுமான பிஷன் சிங் பேடி (77 வயது), நேற்று முன்தினம் காலமானார். டெல்லியில் நேற்று நடந்த இறுதிச்சடங்கில் கபில்தேவ், சேவக், மதன்லால், கீர்த்தி ஆசாத், பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
* உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணியில், காயம் காரணமாக விலகிய வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரணாவுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
* பிரெஞ்ச் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி இணை 21-13, 21-13 என நேர் செட்களில் பிரான்சின் கார்வீ லூகாஸ் – லாபர் ரோனன் இணையை வீழ்த்தியது.
* ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி 1-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் எப்சி அணியை வீழ்த்தியது. இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடிய உள்ள சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
* அண்ணா பல்கலை. 3வது மண்டல பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் கபடி போட்டி ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் நடந்தது. பைனலில் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி 35-27 என்ற புள்ளிக் கணக்கில் செயின்ட் ஜோசப் தொழில்நுட்பக் கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

The post சி ல் லி பா யி ன் ட்… appeared first on Dinakaran.

Tags : Bishan Singh Bedi ,
× RELATED இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி (77) காலமானார்